கியூப தூதுவர் ரில்வின் சில்வா சந்திப்பு
இலங்கைக்கான கியூப தூதுவர் அன்றூ மார்சலோ மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிவி) யினன்பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவைச் சந்தித்துள்ளார்.
பெலவத்தையிலுள்ள கட்சித் தலைமையகத்தில் நேற்று (12) இந்தச் சந்திப்பு நடைபெற்றது.
இலங்கையின் தற்போதைய அரசியல் நிலவரம், கியூபாவுக்கும் இலங்கைக்குமான நட்புறவை மேலும் வலுப்படுத்துவது ஆகிய விடயங்கள் குறித்து இந்தச் சந்திப்பில் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
விசேடமாக இலங்கை – கியூப பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தைக் கட்டியெழுப்புதல், ஐக்கிய நாடுகள் சபையில் கியூபா தொடர்பில் இலங்கையின் வகிபாகம் ஆகியவற்றுக்காகக் கியூப தூதுவர் நன்றி தெரிவித்தார்.
இலங்கையின் பணிக்காலத்தை நிறைவுசெய்துகொண்டு கியு}பா திரும்பும் தூதுவருக்குத் தனது நல்வாழ்த்துனளைத் தெரிவித்த திரு. ரில்வின் சில்வா, அவரது எதிர்கால செயற்பாடுகள் வெற்றிபெற வாழ்த்துகளையும் தெரிவித்தார்.


