கடற்றொழிலாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

கடற்றொழிலாளர்களுக்கான முக்கிய அறிவித்தல் – வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை

வங்காள விரிகுடா மற்றும் அரபிக்கடல் பிராந்தியங்களில் அடுத்த மூன்று நாட்களுக்குப் பலத்த காற்றுடன் கூடிய கொந்தளிப்பான கடல் நிலைமை எதிர்பார்க்கப்படுவதால், கடற்றொழிலாளர்களும் கடற்படைச் சமூகத்தினரும் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள முன்னறிவிப்பின்படி, இக்காலப்பகுதியில் காற்றின் வேகம் மணிக்கு 40 – 50 கிலோமீற்றர் வரை காணப்படும் என்பதுடன், அவ்வப்போது மணிக்கு 60 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன் காரணமாக இக்கடல் பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும்.

மேலும், சில சந்தர்ப்பங்களில் காற்றின் வேகம் மணிக்கு 50 – 60 கிலோமீற்றர் வரையும், சில வேளைகளில் மணிக்கு 70 கிலோமீற்றர் வரையும் அதிகரித்து வீசக்கூடும் என்பதால் கடல் பகுதிகள் மிகக் கொந்தளிப்பாகக் காணப்படலாம் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்றொழிலாளர்களும் கடற்படையினரும் தத்தமது பாதுகாப்பு குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயற்படுமாறும், தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

manel