முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் முன்னிலை
இலங்கை – பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.
போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.
தனது முதலாவது இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி சகல விக்கெட்டுகளை இழந்து 495 ஓட்டங்களைப் பெற்றது.
இந்தநிலையில் தமது முதலாவது இன்னிங்ஸிற்காக துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி சகல விக்கெட்களையும் இழந்து 485 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி சார்பில் பெதும் நிசங்க 187 ஓட்டங்களையும், கமிந்து மெண்டிஸ் 87 ஓட்டங்களையும் அணிக்காக அதிகபட்சமாகப் பெற்றுக் கொடுத்தனர்.
பந்துவீச்சில் பங்களாதேஷ் அணி சார்ப்பில் நயீம் ஹசன் 5 விக்கெட்களை வீழ்த்தினார்.
அதனடிப்படையில் முதல் இன்னிங்ஸ் நிறைவில் பங்களாதேஷ் அணி 10 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளது.

