“Powhiri” வரவேற்பைப் பெற்ற முதல்இலங்கை வெளிவிவகார அமைச்சர்

“Powhiri” வரவேற்பைப் பெற்ற முதல்இலங்கை வெளிவிவகார அமைச்சர்

நியூசிலாந்து நாட்டிற்கு உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டுள்ள இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், தனது பயணத்தின் தொடக்கமாக இன்று காலை அந்நாட்டு வெளிவிவகார மற்றும் வர்த்தக அமைச்சில் வரலாற்றுச் சிறப்புமிக்க வரவேற்பைப் பெற்றுள்ளார்.

அங்கு நியூசிலாந்து பூர்வகுடி மக்களின் பாரம்பரிய மவோரி “Pōwhiri” வரவேற்பைப் பெற்ற முதலாவது இலங்கை வெளிவிவகார அமைச்சர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்

இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை மேலும் வலுப்படுத்தும் நோக்கில் அமைந்துள்ள இந்த விஜயத்தின் போது, இந்த பாரம்பரிய கௌரவத்தைப் பெற்றமை தனக்குக் கிடைத்த பெரும் பாக்கியம் என இலங்கை வெளிவிவகார அமைச்சர் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.

manel