கட்சி மாறும் எம்பிக்களின் பதவிகள் உடனடியாக ரத்து!

கட்சி மாறும் எம்பிக்களின் பதவிகள் உடனடியாக ரத்து!

பொதுமக்களின் வாக்குகளினால் தெரிவுசெய்யப்பட்ட பின்னர், மக்கள் ஆணைக்கு எதிராக கட்சித் தாவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பதவிகளை உடனடியாக ரத்து செய்வதற்கான புதிய சட்டமூலத்தை மிக விரைவில் சபையில் சமர்ப்பிக்க எதிர்பார்ப்பதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அமைச்சர் இத்தகவலை வெளியிட்டுள்ளார்.

தற்போது அரசியல் அரங்கில் பல்வேறு கருத்துக்கள் மற்றும் வதந்திகள் பரவி வருகின்ற நிலையில் எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் எந்தவொரு உறுப்பினரையும் ஆளுங்கட்சியுடன் இணைத்துக்கொள்வதற்கு அரசாங்கத்திற்கு எவ்வித தேவையும் கிடையாது. அதற்கான ஆயத்தங்களும் ஆளும் கட்சியிடம் இல்லை.

தங்களுக்கு வழங்கப்பட்ட மக்கள் ஆணைக்கு துரோகமிழைத்து, கட்சித் தாவும் பாராளுமன்ற உறுப்பினர்களின் எம்.பி பதவிகளை இரத்துச் செய்வதற்கான விசேட சட்டமூலத்தை மிக விரைவில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.தற்போதைய அரசாங்கத்திற்குப் பொது மக்களால் மிக தெளிவான ஆணை வழங்கப்பட்டுள்ளதால், அதற்கமையவே அரசாங்கம் தமது எதிர்கால அரசியல் மற்றும் நிர்வாக நகர்வுகளை முன்னெடுக்கும் எனவும் மேலும் தெரிவித்துள்ளார்.

manel