FCID யில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்‌ஷ

FCID யில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்‌ஷ

வாக்குமூலம் வழங்கலின் பின்னர் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் இருந்து வௌியேறியுள்ளார். 

மிக் போர் ரக விமானக் கொள்முதல் கொடுக்கல்வாங்கல் தொடர்பான வாக்குமூலம் ஒன்றைப் பதிவு செய்வதற்காகவே அவருக்கு அந்த பிரிவினால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று முற்பகல் 9.10 மணியளவில் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் வாக்குமூலம் வழங்குவதற்காக ஆஜராகினார். 

அங்கு சில மணிநேரம் வாக்குமூலம் வழங்கியதன் பின்னர் அங்கிருந்து வெளியேறினார்.

manel