ஓய்வுபெற்ற சிரேஷ்ட பரிசாரகருக்கு கெளரவம்!
கடந்த 35 வருட கால அரச சேவையை வெற்றிகரமாக நிறைவு செய்து, கடந்த 08 ஆம் திகதி ஓய்வுபெற்றுச் சென்ற சிரேஷ்ட பரிசாரகர் ஏ.எல்.கமால்டீனுக்கு, சிரேஷ்ட வைத்தியர்களினால் கௌரவங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
கல்முனை மாவட்ட ஆயுர்வேத வைத்தியசாலையில் இடம்பெற்ற இந்த கெளரவிப்பு நிகழ்வின்போது, நிந்தவூர் ஆராய்ச்சி வைத்தியசாலையின் முன்னாள் பணிப்பாளரும், அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகருமான சிரேஷ்ட வைத்தியர் கே.எல்.எம்.நகபர் அவர்களினால், ஓய்வுபெற்ற பரிசாரகரைப் பாராட்டி அவருக்கு விசேட நினைவுப் பொருளை வழங்கி கௌரவித்தார்.
அத்துடன் வைத்தியசாலையின் வைத்தியர்கள், உத்தியோகத்தர்கள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் இணைந்து ஓய்வுபெற்ற பரிசாரகருக்கு பொன்னாடை போர்த்தி நினைவுச் சின்னம் மற்றும் பரிசிலையும் வழங்கி வைத்தமையும் குறிப்பிடத்தக்கது.

