14 வருடங்களாக மூடப்பட்டு கிடந்த பிரஜா சக்தி நிலையம் புனரமைப்பு
14 வருடங்களாக மூடப்பட்டு கிடந்த பிரஜா சக்தி நிலையத்தினை பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் பணிப்புரையில் புனரமைக்கப்பட்டு மீண்டும் மக்கள் பாவனைக்கு ஒப்படைக்கப்படவுள்ளது.
இரத்தினபுரி மாவட்டம் கஹவத்தை பிரதேச சபைக்குட்பட்ட ஹவுப்பே தோட்டத்தில் கடந்த 2007 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரஜா சக்தி நிலையம் 2011 ஆம் ஆண்டு முதல் பாவனையற்று கிடந்தது.
குறித்த நிலையத்தை புனர்நிர்மாணம் செய்து தருவதாக உறுதி அளித்திருந்த பிரதி அமைச்சர், அதனை புனர்நிர்மாணம் செய்வதற்காக 37 இலட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி இருந்த நிலையில், அதன் புனர் நிர்மாண பணிகளை நேற்று முன்தினம் (09) ஆரம்பித்து வைத்துள்ளதோடு புனரமைப்பு பணிகள் அனைத்தும் இவ்வருடத்திற்குள் பூர்த்தி பூர்த்தி செய்யப்பட்டு திறந்து வைக்கப்பட உள்ளது.
கடந்த 2011 ஆம் ஆண்டு மூடப்பட்டு 14 வருடங்களாக மக்கள் பாவனையற்று கிடந்த இந்த பிரஜாசக்தி நிலையம் இவ் வருடத்திற்குள் மீண்டும் திறந்து வைக்கப்பட்ட பின்னர் இப்பிரதேசத்தில் வாழும் இளைஞர் யுவதிகள் , பாடசாலை மாணவர்கள் இதில் பயனை பெற்றுக் கொள்ள முடியும் என குறிப்பிட்ட பிரதி அமைச்சர் . வீணடிக்கப்பட்ட அரச நிதியை மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.
இந்த நிலையத்தின் புனர்நிர்மாண பணிகளை ஆரம்பித்து வைத்த
பிரதி அமைச்சர், கணினி பாவனைக்கு மட்டுமன்றி ஏனைய பொது சேவைகளுக்கும் பயன்படுத்தப்படும் என தெரிவித்தார்.






