லக்‌ஷபான தேயிலைத் தொழிற்சாலை தீயில் நாசம்: ரூ.1000 கோடி நட்டம்

லக்‌ஷபான தேயிலைத் தொழிற்சாலை தீயில் நாசம்: ரூ.1000 கோடி நட்டம்

நல்லதண்ணி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா லக்ஸபான தேயிலை தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுப் பெரும் சேதம் ஏற்பட்டுள்ளது.

இந்த தீ பரவல் சம்பவமானது 09.10.2025.விடியற்காலை வியாழக்கிழமை 1.30மணியளவில் இடம் பெறாறதாக பொலிஸார் தெரிவித்தனர்.

தொழிற்சாலை தீடிரென தீப் பற்றி எரிந்தமையினால். தொழிற்சாலையில் இருந்த அனைத்துப் பொருட்களும் எரிந்து சாம்பலாகியுள்ளன.

இதனால், சுமார் ஆயிரம் கோடி இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என்று உத்தியோகப்பற்றற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை லக்சபான பகுதி முழுவதும் மின்சாரம் துண்டிக்கப்பட்டுளாளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

தேயிலை தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேயிலை கொழுந்து மற்றும் பொதிசெய்யப்பட்டு களஞ்சியபடுத்தி வைக்கப்பட்ட தேயிலை தூள்கள் தீயில் கருகியுள்ளன..

லக்ஸபான தோட்டத்தின் 5 பிரிவுகளைச் சேர்ந்த பொதுமக்கள், பொலிஸார் இராணுவத்தினர் ஆகியோர் இணைந்து தீயினைக் கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இன்றைய தினம் 5பிரிவுகளைச் சேர்ந்த மக்களும் தொழிலுக்குச் செல்லவில்லை. தோட்ட மக்களால் பறிக்கபாபட்ட பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட தேயிலை கொழுந்து அழிந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

தீயினைக் கட்டுத்துவதற்கு ஹட்டன் டிக்கோயா நகரசபையின் தீயனைப்பு பிரிவினரும் கடமையில் ஈடுபடுத்தப்பட்டனர்.

எதுவாக இருந்தாலும் இது திட்டமிட்ட செயல் எனப் பொதுமக்கள் சந்தேகிக்கின்றனர் தற்பொழுது இந்தத் தேயிலை தொழிற்சாலை தீ பற்றி எரிந்தமையினால் தாம் தொழில் வாய்ப்பை இழந்துள்ளதாகத் தெரிவிக்கும் தோட்ட மக்கள் தேயிலை தொழிற்சாலையினை உடனடியாக புனரமைப்புச் செய்யுமாறும் தெரிவித்தனர்.

தொழிற்சாலை தீப் பற்றியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனத் தெரிவித்த நல்லண்ணி பொலிஸார் ஹட்டன் தடயவியல் பொலிஸார் வரவழைக்கப்பட்டு விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

தீயில் எரிந்து நாசமான தேயிலைத் தொழிற்சாலை, லக்‌ஷபான நீர்த்தேக்கம் அமைக்கப்பட்டதால், நீரில் மூழ்கிய தேயிலைத் தொழிற்சாலைக்குப் பதிலாக 1968ஆம் ஆண்டு வாழமலைப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்டதாகும்.

மஸ்கெலியா விசேட நிருபர்கள்

.

எஸ். ரஜீவன்