இந்தியாவில் இலங்கையர் இருவர் கைது
இந்தியாவின் புதுச்சேரியின் காரைக்காலில் அதிகாரிகள், இரண்டு இலங்கையர்கள் உட்பட ஐந்து பேரை கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
300 கிலோவுக்கும் அதிகமான கஞ்சா போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் ஒன்றின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
போதைப்பொருள் பயன்பாட்டிலிருந்து காரைக்காலை விடுவிப்பதை நோக்கமாகக் கொண்ட ‘ஒபரேசன் விடியல்’ என்ற நடவடிக்கையின் போது இந்த இலங்கையர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இலங்கையர்களில் ஒருவர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் என்றும் மற்றுமொருவர் திருகோணமலையைச் சேர்ந்தவர் என்றும் காரைக்கால் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்

