யானை – மனித மோதலை கட்டுப்படுத்த ஒழுங்கு விதிகள்

யானை – மனித மோதலை கட்டுப்படுத்த ஒழுங்கு விதிகள்

தற்போது அதிகரித்து வரும் யானை – மனித மோதலை கட்டுப்படுத்தும் வகையில் சுற்றாடல் அமைச்சினால் புதிய ஒழுங்குவிதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. 

அதன்படி, யானைகளை வேட்டையாடுதல் மற்றும் அங்கீகரிக்கப்படாத மின்சார வேலிகளை அமைத்து அவற்றைக் கொல்லுதல் என்பன கடுமையான குற்றங்கள் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

அவ்வாறான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்களுக்கு எதிராக, கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சுற்றாடல் அமைச்சர் தம்மிக பட்டபெந்தி மற்றும் பிரதியமைச்சர் அண்டன் ஜயக்கொடி ஆகியோர் தலைமையில் இன்று சுற்றாடல் அமைச்சில் இடம்பெற்ற கலந்துரையாடலிலே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தநிலையில், ‘பாத்திய’ என்ற யானை கடந்த சில நாட்களுக்கு முன்பு துப்பாக்கிச்சூட்டுக்கு உள்ளான நிலையில் நேற்று உயிரிழந்தது. 

இதனையடுத்து, குறித்த யானையின் பிரேதப் பரிசோதனை நடத்தப்படவுள்ளதாகச் சுற்றாடல் அமைச்சர் தம்மிக்க பட்டபெந்தி தெரிவித்துள்ளார். 

நீதிமன்ற உத்தரவு கிடைத்தவுடன் பேராதனை பல்கலைக்கழகத்தின் கால்நடை மருத்துவ பீடத்துடன் இணைந்து பரிசோதனை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்

manel