பயங்கரவாத இயக்கங்கள் தாக்குதல் நடத்தலாம்
லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பயங்கரவாத இயக்கங்கள் நேபாளம் வழியாக இந்தியாவில் ஊடுருவித் தாக்குதலை நடத்தலாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
நேபாள நாட்டு ஜனாதிபதியின் ஆலோசகர் சுனில் பகதூர் தாபா இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளார்.
இந்தியாவில் இருப்பது போன்றே, பயங்கரவாத பிரச்சினைகள் நேபாளத்திலும் எதிரொலிக்கின்றன.
பிராந்தியத்தின் அமைதி, ஸ்திரத்தன்மைக்கு அவை அச்சுறுத்தலாக அமைந்துள்ளன என்றும் சுனில் பகதூர் தாபா குறிப்பிட்டுள்ளார்.
இந்தநிலையில் லஷ்கர் இ தொய்பா, ஜெய்ஷ் இ முகமது போன்ற பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாத இயக்கங்கள் நேபாளம் வழியாக இந்தியாவைத் தாக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

