நான் நடவடிக்கை எடுப்பேன்-சஜித் உறுதி

நான் நடவடிக்கை எடுப்பேன்-சஜித் உறுதி

2028ஆம் ஆண்டுக்கு வெளிநாட்டுக் கடனை திருப்பிச் செலுத்த வேண்டிய நிலையில், ஏற்றுமதி துறையில் எதிர்நோக்கும் சிக்கல்கள் பொருளாதார வளர்ச்சியைப் பாதிப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

கலாவெவ பகுதியில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிக் கொள்கைகள் இலங்கையின் ஏற்றுமதிக்குப் போட்டியை ஏற்படுத்தி உள்ளன. 

பிற நாடுகள் அமெரிக்காவுடன் இணக்கப்பாடுகளை எட்டினாலும், இலங்கை அரசாங்கம் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. 

தற்போதைய அரசாங்கம், முன்னைய அரசாங்கம் மேற்கொண்ட சர்வதேச நாணய நிதிய உடன்பாட்டைத் திருத்தாமல் தொடர்கிறது.

5 சதவீதம் வளர்ச்சி விகிதம் தேவைப்பட்டாலும், தற்போதைய வளர்ச்சி 3.1 முதல் 3.5 சதவீதமாக மட்டுமே உள்ளது. மக்கள் கடனாளிகளாக மாறி, சொத்துகளை அடமானம் வைக்கிறார்கள். 

காணி மற்றும் வீட்டுப் பிரச்சனைகளும் தீர்க்கப்படவில்லை. 

எனவே, ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியாக இருந்து மக்களின் பிரச்சனைகளுக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்கும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

manel

Related Posts