ஈரானுடன் ட்ரம்ப் பேச்சு வார்த்தை
ஈரானின் அணுவாயுதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தை அடுத்தவாரம் இடம்பெறும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற நேட்டோ உச்சி மாநாட்டில் அவர் இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்கள், இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான போரை விரைவில் முடிவுக்குக் கொண்டு வருவதற்கு உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
தங்களின் குண்டுகள் ஈரானின் அணுசக்தி திட்டத்தைப் பேரழிவிற்கு உட்படுத்தியதாகவும், அதன் விளைவுகள் அனைவருக்கும் சிறந்த வெற்றியாகும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், அணுவாயுதங்களை உருவாக்குவதற்கான ஈரானின் பயணம் பல மாதங்கள் பின்னோக்கிச் சென்றுள்ளதாகக் கூறும் அமெரிக்க பாதுகாப்பு புலனாய்வு அமைப்பின் ஆரம்ப மதிப்பீட்டை டொனால்ட் ட்ரம்ப் புறக்கணித்துள்ளார்.

