உக்கிரம் அடையும் யுக்ரைன் ரஸ்யா போர்

உக்கிரம் அடையும் யுக்ரைன் ரஸ்யா போர்

யுக்ரைனின் தலைநகர் கிய்வ் பகுதியை நோக்கி, ரஷ்யாவினால் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை மற்றும் ஆளில்லா விமான தாக்குதலில் குறைந்தது ஏழு பேர் கொல்லப்பட்டதாகவும், பலர் காயமடைந்துள்ளதாகவும், யுக்ரைன் உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். 

இந்த தாக்குதல்களினால், குடியிருப்பு பகுதிகள், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு உட்கட்டமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். 

அண்மைய வாரங்களில், ரஷ்யா யுக்ரைன் நகரங்கள் மீது பாரிய வான்வழித் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது

manel