டிக் டொக் செயலிக்கு மேலும் 90 நாட்கள் கால கேடு
டிக்டொக் செயலி உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபல்யம் வாய்ந்த ஒரு செயலியாக இருந்து வருகிறது.
சீன நிறுவனமான பைட்டான்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இச்செயலியானது பாதுகாப்பு காரணங்களுக்காக சில நாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் பயன்படுத்திவரும் டிக்டொக் செயலிக்கு அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடன் தடைவிதித்திருந்தார்.
இதனையடுத்து பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக் டொக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டது.
இதனால் தற்காலிகமாக டிக் டொக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்திருந்த நிலையில், முன்னதாக இரண்டு முறை அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், டிக் டொக் செயலிக்கு வழங்கப்பட்ட கால அவகாசத்தை மூன்றாவது முறையாக மேலும் 90 நாட்களுக்கு நீட்டிப்பு செய்யுமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார்.

