இஸ்ரேலில் இலங்கை பெண்ணொருவர் காயம்
இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேலில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மேலும், இந்த தாக்குதலின் காரணமாக, வேறு சில இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார்.

