இஸ்ரேலில் இலங்கை பெண்ணொருவர் காயம்

இஸ்ரேலில் இலங்கை பெண்ணொருவர் காயம்

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கைப் பெண் ஒருவர் காயமடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஈரான்-இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக, இஸ்ரேலில் வீட்டுப் பணிப்பெண்ணாகப் பணியாற்றிய இலங்கை பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 

மேலும், இந்த தாக்குதலின் காரணமாக, வேறு சில இலங்கையர்களும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் காயமடைந்துள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் குறிப்பிட்டுள்ளார். 

இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அவதானத்துடன் செயற்படுமாறும், இஸ்ரேலுக்குப் பயணத்தை மேற்கொள்ளவிருந்தவர்கள் பயணத்தைத் தாமதப்படுத்துமாறும் இஸ்ரேலுக்கான இலங்கைத் தூதுவர் அறிவுறுத்தியுள்ளார். 

manel