நுவரெலியா கண்டி பிரதான வீதியில் தீ பற்றி எரிந்த முச்சக்கர வண்டி

நுவரெலியா கண்டி பிரதான வீதியில் தீ பற்றி எரிந்த முச்சக்கர வண்டி
Screenshot

நுவரெலியா – கண்டி பிரதான வீதியில் முச்சக்கரவண்டி  ஒன்று தீப்பற்றி எரிந்ததுள்ளது இந்த சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம் பெற்றது.

நுவரெலியா – கண்டி பிரதான வீதியின் அதிகாரிகம பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனால் முச்சக்கர வண்டியில் பயணித்த வர்களுக்கு எவ்வித பாதிப்புகளும் ஏற்படவில்லை எனவும் முச்சக்கர வண்டியில் ஏற்பட்ட கோளாறு காரணமாக தீ பற்றியிருக்கலாமென பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை நுவரெலியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

manel