கதிர்காம வாசனா யானை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

கதிர்காம வாசனா யானை தொடர்பில் எடுக்கப்பட்ட தீர்மானம்

வரலாற்றுச் சிறப்புமிக்க கதிர்காம ஆலயத்திற்கு சொந்தமான ‘வாசனா’ யானையை, ஒரு சில பிரதான பெரஹெரா நிகழ்வுகளை தவிர, வேறு ஊர்வலங்களில் பங்கேற்க செய்யாமல் இருப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

யானையின் உடல் ஆரோக்கியம் மற்றும் நலனைக் கருத்தில் கொண்டு, இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெரிவித்துள்ளார். 

இதற்கு முன்னர் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற சிறிய பெரஹெரா நிகழ்வுகளிலும் வாசனா யானை ஈடுபடுத்தப்பட்டிருந்தது. 

அத்துடன் தற்போது அந்த யானைக்காக பல்வேறு இடங்களில் இருந்து கோரிக்கைகள் வருகின்றன. 

எவ்வாறாயினும் 58 வயதாகும் வாசனா யானையை பல்வேறு இடங்களுக்கு நீண்ட தூரம் வாகனங்களில் கொண்டு செல்லப்படுவதால் யானைக்கு பெரும் சோர்வும் அசௌகரியமும் ஏற்படுவதாகவும் பஸ்நாயக்க நிலமே சுட்டிக்காட்டுகிறார். 

எனவே, யானையின் சுகாதார நிலைக்கு முன்னுரிமை அளித்து இனிவரும் காலங்களில் ஒருசில பிரதான வரலாற்றுச் சிறப்புமிக்க வழிபாட்டுத் தலங்களின் பெரஹெரா நிகழ்வுகளில் மட்டும் பங்கேற்க செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெரிவித்துள்ளார்.

manel