ஹட்டன் நகரில் ஒரே நபரால் நான்கு கடைகளில் கொள்ளை!சுத்தியலால் சி.சி.டி.வி. கமராக்கள் சேதம்

ஹட்டன் நகரில் ஒரே நபரால் நான்கு கடைகளில் கொள்ளை!சுத்தியலால் சி.சி.டி.வி. கமராக்கள் சேதம்

ஹட்டன் நகரில் இன்று (25) அதிகாலை நான்கு வர்த்தக நிலையங்களின் கதவுகளை உடைத்து உட்புகுந்த நபரொருவர், அங்கிருந்த பணம் மற்றும் பெருமளவிலான பொருட்களைத் திருடிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ஹட்டன் நகரின் பக்க வீதியில் அமைந்துள்ள மூன்று தங்க ஆபரண உற்பத்தி நிலையங்களும் ஒரு சில்லறை விற்பனை நிலையமும் இவ்வாறு திருட்டுக்கு இலக்காகியுள்ளன.

குறித்த வர்த்தக நிலையங்களின் கதவுகளில் பொருத்தப்பட்டிருந்த பூட்டுகளை ஏதோவொரு கருவியால் வெட்டி அகற்றிவிட்டு உள்ளே புகுந்த சந்தேகநபர், அங்கு பொருத்தப்பட்டிருந்த சி.சி.டி.வி. கமராக்களைச் சுத்தியலால் தாக்கிச் சேதப்படுத்தியுள்ளார். மேலும், சில கமராக்களின் திசைகளையும் மாற்றியுள்ளார்.

எனினும், இரண்டு வர்த்தக நிலையங்களில் பொருத்தப்பட்டிருந்த பாதுகாப்புக் கமரா கட்டமைப்புகளில், சந்தேகநபர் திருட்டில் ஈடுபடும் காட்சிகள் பதிவாகியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்தத் திருட்டுச் சம்பவங்கள் தொடர்பாக பாதிக்கப்பட்ட நான்கு வர்த்தக நிலையங்களின் உரிமையாளர்களும் ஹட்டன் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடுகளைப் பதிவு செய்துள்ளனர்.

இந்நிலையில், அண்மைக் காலமாக ஹட்டன் நகரில் இவ்வாறான திருட்டுச் சம்பவங்கள் பல இடம்பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சம்பவங்கள் தொடர்பிலும் சந்தேகநபரைக் கைது செய்வதற்காகவும் ஹட்டன் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

manel

Related Posts