எல்பட பிரதான தொங்கு பாலம் புனரமைப்பு தொடர்பாக ஜனாதிபதி நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் கோரிக்கை
நோர்வூட் பிரதேசசபைக்குட்பட்ட நோர்வூட் எல்பட தோட்டப்பகுதி மக்கள் போக்குவரத்திற்காக பயண்படுத்தும் தொங்கு பாலம் சேதமடைந்து காணபடுகின்றமை தொடர்பாக நாட்டின் ஜனாதிபதி அனுரகுமார திஷாநாயக்க பாலத்தினை புனரமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.




நோர்வூட் எல்பட கீழ்பிரிவு மற்றும் மேல்பிரிவு ஆகிய தோட்டப்பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் நாளாந்தம் குறித்த வீதியினையே பயண்படுத்தி வருகின்றனர்,
நாட்டிலும் பலதரப்பட்ட அரசியல் மாற்றங்கள் இடம் பெற்றாலும் தாம் பிரதான பலமாககாணப்படும் இந்த பாலத்தினை புனரமைப்பதற்கு எவரும் முன்வரவில்லை,
கடந்த காலங்களில் நோர்வூட் பிரதேச சபை ஊடாக 13இலட்ச்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பாலத்தினை புனரமைப்பதாக கூறி வெறுமனே வாகை பலகையினை கொண்டு அமைத்துள்ளார்கள்.
இந்த பாலம் நீண்டகாலமாக பழுதடைந்த நிலையில் காணப்படுகின்றமையால் கடந்த காலங்களில் உயிர்சேதங்கள் ஏற்பட்ட சம்பவங்களும் பதிவாகியிருக்கின்றன.
நோர்வூட் தேசிய கல்லூரி மற்றும் ஹூலன்ஸ் கல்லூரி பொகவந்தலாவ சென்மேரீஸ் தேசிய கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு செல்லும் பாடசாலை மாணவர்களும் நாளாந்தம் இந்த தொங்கு பாலத்தினையே பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த பாலத்தில் பொருத்தப்பட்டிருக்கும் பலகைகள் உக்கிய நிலையில் காணப்படுவதாக மக்கள் சுற்றிக்காட்டுகின்றனர்.
இதுவரை காலமும் மலையகத்தில் எந்த ஒரு அரசியல்வாதிகளும் இந்த தொங்கு பாலம் குறித்து அக்கரை செலுத்தவில்லை,
இந்த தேசிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் ஊடாக எமது தோட்ட மக்கள் நாளாந்தம் பயன்படுத்தும் இந்த தொங்கு பாலத்தினை கொங்கீறீட் பாலமாக மாற்றியமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

