கடவுச்சீட்டுக்காக 26,000 இலங்கையர்கள் விண்ணப்பிப்பு!
புதிய கடவுச்சீட்டுக்காக தொழிலாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட 26,000 இற்கு மேற்பட்ட வெளிநாட்டிலுள்ள இலங்கையர்கள் இலங்கை தூதரங்கள் மூலம் விண்ணப்பித்துள்ளதாக வெளிநாட்டு அலுவல்கள் ,வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதி அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
மேலும் சிலரது கடவுச்சீட்டுகள் காலாவதியாகி விட்டதால் இலங்கையர்கள் பல பிரச்சனைகளை எதிர்கொள்ளாவதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இப்ப பிரச்சனைகளுக்கான தீர்வை மேற்கொள்வதற்காக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடல் ஒன்றை நடத்தவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இம்மாத இறுதிக்குள் இப்பிரச்சினைகளை தீர்க்க முயற்சிகள் மேற்கொள்வதாகவும் வெளிநாட்டு கடவுச்சீட்டுகளைப் பெறுகின்ற போதிலும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பான தகவல்களை பெற்றுக் கொள்ளும் சந்தர்ப்பங்களிலும் இடைத்தரகர்களின் உதவியை நாடவேண்டாம் என்றும் பிரதி அமைச்சர் ஹேமச்சந்திர பொதுமக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

