ஹாலி-எல பகுதிக்கு 1,750 தென்னங்கன்றுகள் விநியோகம்!

ஹாலி-எல பகுதிக்கு 1,750 தென்னங்கன்றுகள் விநியோகம்!

நாட்டின் தேங்காய் உற்பத்தியை அதிகரிக்கும் நோக்கில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் கீழ் இயங்கும் தென்னைப் பயிர்ச்செய்கை சபையினால் முன்னெடுக்கப்படும் ‘கப்துரு சவிய’ தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், ஹாலி-எல பிரதேச செயலாளர் பிரிவுக்கு 1,750 தென்னங்கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் வீட்டுத் தோட்டங்களில் பயிரிடுவதற்காக இலவசமாக 5 இலட்சம் தென்னங்கன்றுகளைப் பகிர்ந்தளிக்கும் திட்டத்தின் ஒரு பகுதியாக, நேற்று (08) ஹாலி-எல பிரதேச செயலகத்தில் இந்த விநியோகம் இடம்பெற்றது.

வீட்டுத் தோட்ட மட்டத்தில் தென்னைப் பயிர்ச்செய்கையை ஊக்குவிப்பதுடன், தேசிய தேங்காய் உற்பத்திக்கு பங்களிப்புச் செய்வதும் இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இந்நிகழ்வில் இளைஞர் விவகாரங்கள் பிரதி அமைச்சர் தினிந்து சமன் ஹென்னாயக்க, ஹாலி-எல பிரதேச சபைத் தலைவர் பிரியந்த வருஷமான்ன, தென்னைப் பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் உள்ளிட்ட அரச அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் கலந்துகொண்டனர்.

manel