ஹோமாகம பொலிஸ் நிலையத்தில் உயிரிழந்த இளைஞனின் இறுதி கிரியைகள் இன்று
ஹோமாகம காவல்துறையில் உயிரிழந்த இளைஞனின் மனைவி உள்ளிட்ட ஐந்து பேருக்கு நீதிமன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
குறித்த இளைஞனின் இறுதிச்சடங்கு இன்று (29)கிரிவத்துடுவ – கல்கந்த பொது மயானத்தில் நடைபெறவுள்ளது.
இதனடிப்படையில், குறித்த காலப்பகுதியில் கிரிவத்துடுவ , முனுமலேவத்த, 17ஆவது குறுக்குச் சந்திலிருந்து கல்கந்த பொது மயானம் வரையிலான பிரதான வீதிகள் மற்றும் உப வீதிகளில் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்படும் வகையிலும், பிரதான வீதியின் போக்குவரத்து நெரிசலுக்கு இடையூறு ஏற்படும் வகையிலும் ஆர்ப்பாட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்துவதை தடுத்து கஸ்பேவ மாவட்ட நீதிமன்றம் நேற்று (28) இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
கஹத்துடுவ காவல்துறையினர் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கவே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்த உத்தரவு 14 நாட்களுக்கு செல்லுபடியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

