எப்பாவல பொஸ்பேட் நிறுவனத்தில் ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள்!
எப்பாவல இலங்கை பொஸ்பேட் நிறுவனத்தின் உற்பத்தி மற்றும் செயற்பாட்டு நடவடிக்கைகளை விரிவுபடுத்தும் நோக்கில், ரூ.110 மில்லியன் பெறுமதியான புதிய இயந்திரங்கள் மற்றும் செயற்பாட்டு வாகனங்கள் நிறுவனத்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வு நேற்று (27) கைத்தொழில் மற்றும் தொழில்முனைவோர் அபிவிருத்தி அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தலைமையில் நடைபெற்றது.
நிறுவனத்தின் உற்பத்தித் திறனை மேலும் அதிகரிப்பதுடன், செயற்பாடுகளை வினைத்திறனுடன் முன்னெடுப்பதற்கும் புதிய இயந்திரங்கள் மற்றும் வாகனங்கள் பங்களிப்பு வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்ளூர் வளங்களை அதிகபட்சமாகப் பயன்படுத்தி, நாட்டின் விவசாயத் துறைக்கு தேவையான பொஸ்பேட் உர உற்பத்தியை மேம்படுத்துவதற்கும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையும்.

