சிறைக்கு பதில் வீட்டுக்காவல்! சட்ட மறுசீரமைப்புகள் முன்னெடுப்பு

சிறைக்கு பதில் வீட்டுக்காவல்! சட்ட மறுசீரமைப்புகள் முன்னெடுப்பு

சிறைச்சாலைகளில் தடுத்து வைப்பதற்கு பதிலாக வீட்டுக்காவலில் வைப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள சட்ட மறுசீரமைப்புகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

இன்று (01) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். 

இதற்காகப் பல சட்ட மறுசீரமைப்புகள் குறித்து தற்போது கலந்துரையாடப்பட்டு, தேவையான சட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். 

“நீதித்துறை அமைப்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல மறுசீரமைப்புகளுக்கு மத்தியில் இந்தச் சட்ட மறுசீரமைப்பும் இடம்பெறுகிறது. சிறைச்சாலைகளின் நெருக்கடியைக் குறைத்தல், அரசாங்க பகுப்பாய்வாளர் திணைக்களத்தின் அறிக்கைகளை விரைவுபடுத்துதல், பிணை பெற முடியாதவர்களுக்குப் பிணை வழங்குவதற்குத் தேவையான சட்ட மறுசீரமைப்புகளைச் செய்தல், சிறைச்சாலைகளுக்கு வெளியே இவ்வாறானவர்களை வீடுகளில் தடுத்து வைத்து தண்டனைக் காலத்தைக் கழிப்பதற்கான வாய்ப்பை வழங்குதல் போன்ற பல மறுசீரமைப்புகள் குறித்து கலந்துரையாடப்பட்டு சட்டங்கள் இயற்றப்பட்டு வருகின்றன. இந்தச் செயற்திட்டத்தின் ஒரு அங்கமாகவே நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை உயர்த்தவும் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.” என்றார்.

manel