பெட்ரோல் விலை குறைக்கப்பட்டாலும் முச்சக்கரவண்டி கட்டணம்..

பெட்ரோல் விலை குறைக்கப்பட்ட போதிலும், முச்சக்கரவண்டி கட்டணங்களில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்த முடியாது என தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கரவண்டி சாரதிகள் மற்றும் கைத்தொழில் முயற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
தற்போது ஒரு கிலோமீட்டருக்கு 16 ரூபாய் நட்டத்துடனேயே தமது தொழிலை முன்னெடுத்து வருவதாக அந்தச் சங்கத்தின் பிரதம செயலாளர் லலித் ரோஹண பெரேரா தெரிவித்துள்ளார்.
எனவே முச்சக்கரவண்டி கட்டணத்தில் எவ்வித மாற்றங்களும் மேற்கொள்ள முடியாத என அவர் குறிப்பிட்டுள்ளார்.

