பலத்த காற்று குறித்து எச்சரிகை!

பலத்த காற்று குறித்து எச்சரிகை!

தென்மேற்கு பருவப்பெயர்ச்சி மழை காரணமாக, நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இந்த எச்சரிக்கையானது நாளை (01) முற்பகல் 11.00 மணி வரை அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, மேல், சபரகமுவ, மத்திய, தென், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் பலத்த காற்று வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.

குறித்த பகுதிகளில் மணிக்கு 40 முதல் 50 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும்.

15 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

07 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

manel