ஹட்டன் வலயகல்வி பணிமனையில் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

ஹட்டன் வலயகல்வி பணிமனையில் 36உத்தியோகத்தர்களுக்கான வேதனம் இடைநிறுத்தம்!

மத்திய மாகாணம் ஹட்டன் கல்வி வலைய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற 36உத்தியோகத்தர்களுக்கான மே மாதத்திற்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட உத்தியோகத்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

ஹட்டன் கல்விவலைய காரியாலயத்தில் பணிபுரிந்து வருகின்ற உத்தியோகத்தர்கள் 36பேருக்கும் எவ்வித முன்னறிவித்தலின்றி இவர்களுக்கான வேதனம் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இவர்கள் மேலும் தெரிவித்தனர்.

இம் மாதத்திற்கான வேதன பணத்தை எவ்வித அறிவித்தலுமின்றி இடை நிறுத்தப்பட்ட மையினால் தாம் பல்வேறு அசெளகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் வாழ்வாதார ரீதியாக தாம் பாரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்கள் மேலும் குறிப்பிடுகின்றனர்.

இம் மாதத்திற்கான வேதனம் நிறுத்தப்பட்ட மையினால் தமது பிள்ளைகளுடைய கல்வி நடவடிக்கைகள் என்பன பாதிக்கப்பட்டுள்ளது

இந்த விடயம் தொடர்பாக ஹட்டன் வலையகல்வி பணிமனையின் கடமை நிறைவேற்று கல்வி பணிப்பாளர் ஏ.சுமதியை தொடர்பு கொண்டு வினவியபோது. சிலர் இடமாற்றம் பெற்று சென்றிருப்பார்கள் அல்லது இடமாற்றத்தினை பெற்று வந்திருப்பார்கள் அவர்களுடைய முலுமையான ஆவனங்கள் கிடைக்காத பட்சத்தில் இவர்களுக்கான இம் மாத சம்பளத்தினை நிதி சுற்றறிக்கை அடிப்படையில் அவர்களுக்கான சம்பளம் நிறுத்தப்பட்டிருக்குமே தவிர ஹட்டன் வலையகல்வி பணிமனையின் ஊடாக சம்பளம் நிறுத்தப்படவில்லை என ஹட்டன் வலைய கல்வி பணிமனையின் கடமை நிறைவேற்று கல்வி பணிப்பாளர் ஏ.சுமதி தெரிவித்தார்.

இந்த விடயம் தொடர்பில் மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் நயனி எட்டியாரச்சியிடம் வினவினோம் அதற்கு பதில் அளித்த மத்திய மாகாண மேலதிக கல்வி பணிப்பாளர் இது தொடர்பாக எவ்வித முறைப்பாடும் எமக்கு கிடைக்கவில்லை இம்மாதம் சம்பளம் கிடைக்கவில்லை என்ற முறைப்பாடு கூட எமக்கு வரவில்லை இருந்தாலும் இது தொடர்பாக ஹட்டன் வலையகல்வி பணிமனையின் பணிப்பாளரோடு கலந்துரையாடவிருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

manel