826 லீற்றர் டீசலுடன் இருவர் கைது
மருதானை, டி.ஆர். விஜேவர்தன மாவத்தை பகுதியில் அனுமதிப்பத்திரமின்றி 826 லீற்றர் டீசலை கையிருப்பில் வைத்திருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அத்துடன் எரிபொருள் விற்பனை மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 72,210 ரூபாய் பணத்தையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைதானவர்கள் 23 மற்றும் 61 வயதுடைய வெள்ளவத்தை மற்றும் வாரியப்பொல பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

