அவுஸ்திரேலிய துப்பாக்கிச் சூட்டில் 10 இற்கும் மேற்பட்டோர் பலி
அவுஸ்திரேலியா துப்பாக்கிச்சூடு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
துப்பாக்கிச் சூட்டில் குறைந்தது 10 பேர் உயிரிழந்துள்ளதாக முன்னர் தகவல்கள் வெளியான போதிலும் தற்போது பொலிஸார் அந்த தகவலை உறுதிபடுத்தியுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில், உள்ளூர்வாசி ஹாரி வில்சன் ஹெரால்டு தெரிவிக்கையில்,
“குறைந்தது 10 பேர் தரையில் உயிருக்கு போராடி கிடந்ததையும், எல்லா இடங்களிலும் இரத்தம் சிந்தியிருப்பதையும் நான் கண்டேன்,” என்று துப்பாக்கிச் சூட்டை நேரில் பார்த்த 30 வயதான அவர் தெரிவித்தார்.
அவுஸ்திரேலிய யூத நிர்வாகக் குழுவின் இணைத் தலைமை நிர்வாகி அலெக்ஸ் ரிவ்சின்
ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில்,
காலைநேரத்தில் தொடங்கிய யூத பண்டிகையான ஹனுக்காவைக் கொண்டாடும் கடற்கரையில் நடந்த ஒரு நிகழ்வில் துப்பாக்கிச் சூடு நடந்ததாகக் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் அவுஸ்த்ரேலியா பிரதமர் அந்தனி அல்பானீஸ் சற்றுமுன் ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார்:
அதில், போண்டியில் உள்ள காட்சிகள் அதிர்ச்சியூட்டும் மற்றும் துயரத்தை அளிக்கின்றன. பொலிஸாரும் அவசரகால மீட்புப் பணியாளர்களும் உயிர்களைக் காப்பாற்ற களத்தில் உள்ளனர். பாதிக்கப்பட்ட ஒவ்வொரு நபரைப் பற்றியும் எனது எண்ணங்கள் உள்ளன.
நான் இப்போதுதான் ஆணையர் மற்றும் அதிகாரிகளிடம் பேசினேன். நாங்கள் பொலிஸாருடன் இணைந்து பணியாற்றி வருகிறோம், மேலும் தகவல்கள் உறுதிப்படுத்தப்பட்டவுடன் மேலும் புதுப்பிப்புகளை வழங்குவோம்.
அருகிலுள்ள மக்கள்பொலிஸாரின் தகவல்களைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன். என தெரிவித்துள்ளார்.

