இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருள்கள் 

இந்தியாவிடமிருந்து மேலும் ஒரு தொகை நிவாரணப் பொருள்கள் 

அனர்த்தத்தினால் பாதிக்கப்பட்ட இந்நாட்டு மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்திற்குத் தொடர்ச்சியாக ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பெருமளவான நிவாரணப் பொருட்கள் நேற்று (07) மாலை கொழும்பு துறைமுகத்தின் BQ 2 தளத்தில் பொறுப்பேற்கப்பட்டன. 

இந்நிகழ்வில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா மற்றும் வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க ஆகியோர் கலந்துகொண்டனர்.

எஸ். ரஜீவன்