மீண்டும் சபைக்கு வரும் இலங்கை – அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தம்
இலங்கைக்கும் அமெரிக்காவிற்குமிடையில் செய்துகொள்ளப்பட்ட பாதுகாப்பு ஒப்பந்தம் மீண்டும் சபையில் சமர்ப்பிக்கப்படும் என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகர இன்று (20) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாதுகாப்பு ஒப்பந்தம் முன்னரே சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகக் கூறப்பட்டாலும், சிங்கள மொழியில் உள்ள ஆவணம் மட்டுமே பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர சுட்டிக்காட்டினார்.
உரிய ஒப்பந்தம் (முழுமையாக) சபையில் சமர்ப்பிக்கப்படவில்லை என்று பாராளுமன்ற உறுப்பினர் சபையில் தெரிவித்தார்.
இதற்குப் பதிலளித்த பாதுகாப்பு பிரதி அமைச்சர், இந்த ஒப்பந்தம் முன்னரே பாதுகாப்பு அமைச்சின் மீதான விவாதத்தின் போது சபையில் சமர்ப்பிக்கப்பட்டதாகவும், அதனை மீண்டும் இன்று (20) தான் சபையில் சமர்ப்பிப்பதாகவும் கூறினார்.

