மரகுற்றிகளை ஏற்றிவந்த லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

மரகுற்றிகளை ஏற்றிவந்த லொறி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து

பொகவந்தலாவ பலாங்கொட பிரதான வீதியின் பொகவந்தலாவ பெத்தராசி பகுதியில் மரக்குற்றில்களை ஏற்றிவந்த லொறி ஒன்று 25அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர்

இந்த சம்பவம் 11.11.2025.செவ்வாய்கிழமை காலை 10.45 மணியவில் இடம் பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மாரத்தென்ன பகுதியில் இருந்து கம்பளை பகுதிக்கு மரக்குற்றிகளை ஏற்றி சென்ற பார ஊர்தி பின்புறத்தில் பொருத்தப்பட்டிருந்த டயர் கீழ் இறங்கியதன் காரணமாக விபத்து இடம் பெற்றதாக பொகவந்தலாவ பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சம்பவம் இடம்பெற்ற போது பார ஊர்தியில் சாரதி மாத்திரம் இருந்ததாகவும் சாரதிக்கு எவ்வித காயங்களும் ஏற்பட வில்லையெனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

எஸ். ரஜீவன்