7மணித்தியாலயத்திற்கு பிறகு சீர் செய்யப்பட்ட போக்குவரத்து.

7மணித்தியாலயத்திற்கு பிறகு சீர் செய்யப்பட்ட போக்குவரத்து.

பலாங்கொடையில் இருந்து ஹட்டன் நோக்கி பயணித்த தனியார் பேருந்து ஒன்றில் முன்பகுதியில் உள்ள டயர் பொருத்தப்பட்ட சக்கரம் உடைந்ததன் காரணமாக சுமார் பொகவந்தலாவ பலாங்கொட வீதியின் பொகவந்தலாவ பெற்றோசோ பகுதியில் 07மணித்தியாலங்கள் போக்குவரத்து தடை ஏற்பட்டதாக பொகவந்தலாவ போக்குவரத்து பொலிஸார் தெரிவித்தனர் இந்த சம்பவம் 23.04.2026.வியாழக்கிழமை முற்பகல் 11மணிக்கு இந்த சம்பவம் இடம் பெற்றதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பேருந்தில் பயணித்த எவருக்கும் எவ்வித காயங்கள் எதுவும் ஏற்படவில்லை இதேவேளை பலாங்கொட பகுதியில் இருந்து பெக்கோ இயந்திரம் ஒன்று வரவழைக்கப்பட்டதன் பின்னர் 07மணித்தியாலங்களுக்கு பின்னர் குறித்த வீதியின் போக்குவரத்து சீர் செய்யப்பட்டதாக பொகவந்தலாவ போக்குவரத்து பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

இந்த சம்பவம் காரணமாக குறித்த வீதியின் ஊடாக பயணித்த வாகனங்கள் நீண்ட வரிசையில் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

manel