2026 உலகக் கிண்ணமே எனது கடைசி தொடர்!
போர்த்துக்கல் அணியின் நட்சத்திர வீரரான கிறிஸ்டியானோ ரொனால்டோ, 2026 உலகக் கிண்ணம் தனது கடைசி உலகக் கிண்ண தொடராக இருக்கும் என்பதை உறுதிப்படுத்தியுள்ளார்.
ஸ்பெயின் அணிக்கு எதிரான போர்த்துக்கல் 16 ஆவது சுற்றுப் போட்டிக்கு முன்னதான ஊடக சந்திப்பின் போது, இனிவரும் காலங்களில் அவருடைய சர்வதேச போட்டிகளின் முடிவு குறித்து கேள்வி கேட்கப்பட்டது.
அதற்குப் பதிலளித்த அவர்,
இதுவே தனது கடைசி உலகக் கிண்ணம் என்று அறிவித்தார். 41 வயதான ரொனால்டோ, தற்போது நடைபெற்று வரும் தொடரில் தனது ஆறாவது உலகக் கிண்ணத்தில் விளையாடுகிறார்.
இதில், நாக்-அவுட் சுற்றில் அடித்த தனது முதல் கோல் உட்பட மூன்று கோல்களை அடித்துள்ளார். ஒட்டுமொத்தமாக, ரொனால்டோ தனது உலகக் கிண்ணத்தில் வாழ்க்கையில் 11 கோல்களை அடித்துள்ளார்.
“நான் இதை முடிந்தவரை முழுமையாக அனுபவிக்க விரும்புகிறேன், ஏனென்றால் இதுதான் எனது கடைசி உலகக் கிண்ணமாகும். ஆனால் நாளை (07) ஆட்டம் உலகக் கிண்ணத்தில் எனது கடைசி ஆட்டமாக இருக்காது என்று நம்புகிறேன்,” என ரொனால்டோ கூறியதாக ஒன்ஃபூட்பால் தெரிவித்துள்ளது.

