1000க்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலையிலிருந்து இடைவிலகல்
2024 மற்றும் 2025 ஆகிய ஆண்டுகளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் பாடசாலைகளில் இருந்து இடைவிலகியுள்ளதாக கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே தெரிவித்துள்ளார்.
வாய்மூல விடைக்கான எதிர்பார்ப்புடன் இன்று (19) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தேவானந்த சுரவீரவினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் நலின் ஹேவகே இதனைத் தெரிவித்தார்.
இதன்போது மேலும் கருத்துத் தெரிவித்த கல்விப் பிரதி அமைச்சர் நலின் ஹேவகே,
“அடையாளம் காணப்பட்டுள்ள பாடசாலைக்குச் செல்லாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 711 ஆகவும், 2025 இல் 885 ஆகவும் காணப்படுகிறது. பாடசாலையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை மாணவிகள் 280, மாணவர்கள் 290 ஆகும். 2025 இல் மாணவிகள் 384, மாணவர்கள் 393 ஆகும். கல்வி வாய்ப்புகளுக்கு வழிநடத்தப்படாதவர்களின் எண்ணிக்கை 2024 இல் 10 மாணவிகள், 18 மாணவர்கள் 18 ஆகும். 2025 இல் 11 மாணவிகள் மற்றும் 23 மாணவர்கள் ஆகும்.
பாடசாலையிலிருந்து இடைவிலகிய மாணவர்களின் எண்ணிக்கை 2024 இல் 597 ஆகவும், 2025 இல் 301 ஆகவும் இருந்தது. மீண்டும் பாடசாலையில் சேர்க்கப்பட்ட பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 309 ஆகவும், 2025 இல் 210 ஆகவும் காணப்படுகிறது. பாடசாலையில் சேர்க்கப்படாத பிள்ளைகளின் எண்ணிக்கை 2024 இல் 47 ஆகவும், 2025 இல் 91 ஆகவும் உள்ளது.” என்றார்.

