வெளியே செல்லும்போது எடுக்கும் செல்பிகளை வெளியிடாதீர்கள்!

வெளியே செல்லும்போது எடுக்கும் செல்பிகளை வெளியிடாதீர்கள்!

சுற்றுலா, யாத்திரைகள் மற்றும் பல்வேறு சுற்றுப் பயணங்களுக்காக வீட்டில் இருந்து வெளியே செல்லும்போது, தாம் இருக்கும் இடத்தைக் குறிப்பிட்டு சமூக ஊடகங்களில் செல்பி புகைப்படங்களை வெளியிடுவதைத் தவிர்க்குமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், உதவிப் பொலிஸ் அத்தியட்சகருமான எஃப். யூ. வூட்லர் பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். 

இது உங்களை பின் தொடரும் குற்றவாளிகளுக்கோ அல்லது தங்களது வீடு மற்றும் சொத்துக்கள் குறித்து நோட்டமிடும் நபர்களுக்கோ சாதகமான தகவலாக அமையலாம் என்று அவர் விளக்கியுள்ளார். 

பத்தரமுல்லை சுஹுருபாயவில் அமைந்துள்ள பொலிஸ் ஊடகப் பிரிவின் கேட்போர் கூடத்தில் இன்று (11) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இந்தக் கருத்தை வெளியிட்டார். 

அத்துடன் சுற்றுலா பயணங்களுக்காகத் தெரிவு செய்யும் பஸ் அல்லது வாகனம் மற்றும் அதன் சாரதி குறித்து சரியான புரிந்துணர்வுடன் இருப்பதும் மிகவும் முக்கியமானது என்றும் அவர் வலியுறுத்தினார். 

எஸ். ரஜீவன்