விஜய்யின் வீடு திமுகவினரால் முற்றுகை
சென்னையிலுள்ள தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் வீட்டை திராவிட முன்னேற்றக்கழக மாணவர் அணியினர் முற்றுகையிட்டுள்ளனர்.
கரூர் சம்பவம் குறித்து விசாரணை நடத்த தமிழக அரசு ஒரு நபர் விசாரணை ஆணைக்குழுவை அமைத்துள்ளது.
பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவத்தின் நீட்சியாக த.வெ.க தலைவர் விஜயை கைது செய்ய கோரி ஒரு தரப்பினர் கோரிக்கை விடுத்த வண்ணமுள்ளனர்.
மறுபுறம், தமிழக பொலிஸாரின் கவனக்குறைவே இதுபோன்ற துயர சம்பவத்திற்கு காரணமாகி விட்டதாக குற்றம் சாட்டி வருகின்றனர்.
இந் நிலையில், சென்னையில் பனையூரில் உள்ள விஜய் வீட்டை திராவிட முன்னேற்றக்கழக மாணவர் அணியினர் முற்றுகையிட்டுள்ளனர்.
குழந்தைகளின் உயிர்களுக்கு பதில் சொல்ல வேண்டும் என்று விஜய்க்கு எதிராக போராட்டக்காரர்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
இவர்களின் கண்டன போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் பரபரப்பும், பதற்றமும் ஏற்பட்டுள்ளது.

