முஸ்லிம் சுகாதார உதவியாளர்களின் ஆடை விடயத்தில் இடையூறு : மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சம்

முஸ்லிம் சுகாதார உதவியாளர்களின் ஆடை விடயத்தில் இடையூறு : மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சம்

கல்முனை ஆதார வைத்தியசாலையில் புதிதாக நியமிக்கப்பட்டு கடமையேற்கச்சென்ற முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்களின் ஆடை விடயத்தில் இடையூறு விளைவிக்கப்படுவதாக தகவல் பரவி வருகின்றது.

சில முஸ்லிம் பெண் சுகாதார உதவியாளர்கள் கடமைக்குச்செல்லாது மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்திருக்கின்றார்கள்.

இது தவிர, அவ்வைத்தியசாலையில் பாரம்பரியமாக காணப்படும் கோவில் அபிவிருத்தி செய்யப்பட்டு வரும் நிலையில், ஒல்லாந்தர் கால பள்ளிவாசல் அங்கு அமைக்கப்பட்டு யுத்த காலத்தில் ஜூம்ஆத்தொழுகை கூட இடம்பெற்றிருந்தது.

எனினும், இடிந்து விழும் நிலையில் பள்ளிவாசல் இருப்பதாகவும் அதனை அபிவிருத்தி செய்வதற்கும் வைத்தியசாலை நிர்வாகம் அசமந்தப்போக்கோடு செயற்படுவதாகவும் மற்றுமொரு குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்விரு விடயங்கள் தொடர்பிலும் உரிய அதிகாரிகளைத்தொடர்பு கொள்வதற்கும் வைத்தியசாலை அபிவிருத்திக்குழு (முழுவரும் தமிழர்கள் நியமனம்) தொடர்பிலும் விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது.

இவ்வைத்தியசாலை மருதமுனை, பெரிய நீலாவணை, பாண்டிருப்பு, சேனைக்குடியிருப்பு, நற்பிட்டிமுனை, கல்முனை உள்ளிட்ட மக்களின் சொத்தாகும். இதனை ஒரு தரப்பினரை அபிவிருத்திக்குழுவில் இணைத்துக்கொண்டு பயணிப்பதால் தான் இவ்வாறான பிரச்சினைகளை எழுகின்றன.

முதலில் வைத்தியசாலை அபிவிருத்திக்குழுவில் சகல பிரதேச மக்களும் இன, மத மொழிகளைக்கடந்து நியமிக்கப்பட வேண்டும்.

இவ்வாறான விடயங்களைக்கூட கலந்துரையாடுவதற்கு குறித்த வைத்தியசாலையின் பணிப்பாளரை பல தடவை தொடர்பு கொண்ட போதிலும் பதிலளிக்காது தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

manel