மலையக கல்விக்கு கரம் நீட்டிய உதவும் மனிதம்!

மலையக கல்விக்கு கரம் நீட்டிய உதவும் மனிதம்!

இலங்கையில் இருந்து உதவும் மனிதம் அறக்கட்டளை சார்பாக நடிகர் மற்றும் சமூக செயல்பாட்டாளர் பிளாக் பாண்டி அவர்கள் மூலமாக இலங்கையில் மலையகத்தை சேர்ந்த 4 மாணவிகளுக்கு கல்வி தங்குமிடம் உணவு வசதி விமான பயண சீட்டு விசா என்று அனைத்தையும் கட்டணமில்லா வசதியை ஏற்படுத்தி அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்துவதற்காக இந்த முயற்சியை உதவும் மனிதம் மேற்கொண்டுள்ளது.

சென்னையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கல்லூரியில் அந்த மாணவிகள் அனைவரையும் முதலாம் ஆண்டு மாணவிகளோடு வரவேற்கும் நிகழ்வு கல்லூரியின் முதல்வர் மற்றும் செயலாளர் தேவ் ஆனந்த் அவர்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் எமது நாட்டில் இருந்து சென்ற நான்கு மாணவிகள் மற்றும் உதவு மனிதருக்கு உதவி செய்த அன்பு உறவுகள் முன்னிலையில் சிறப்பாக இடம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.

manel