பெருந்தோட்ட அமைச்சில் கோலாகலமாக நடைபெற்ற நவராத்திரி விழா:

பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சில் கோலாகலமாக நடைபெற்ற நவராத்திரி விழா:

சமத்துவமும் சகோதரத்துவமும் ஓங்க உழைப்போம் என அமைச்சர்கள் அழைப்பு!*கொழும்பு (20.10.2026):பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சின் உட்கட்டமைப்பு வசதிகள் பிரிவினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நவராத்திரி விழா இன்று (20.10.2026) கொள்ளுப்பிட்டியில் அமைந்துள்ள அமைச்சின் அலுவலகத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இந்நிகழ்வு பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கடற்றொழில் மற்றும் நீர் வளங்கள் அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகரன் அவர்கள் கலந்துகொண்டார்.

மேலும், பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் குணதாஸ சமரசிங்க உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள், ஏனைய செயலாளர்கள், நிறுவனத் தலைவர்கள், ஊழியர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர்.

சமூக இணக்கப்பாடும் சகோதரத்துவமுமே புதிய இலங்கையின் அடித்தளம்: பிரதியமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் உரை*நிகழ்வில் தலைமையுரையாற்றிய பிரதி அமைச்சர் கௌரவ சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவிக்கும்போது:> “

பணிபுரியும் இடங்களில் பல்வேறுபட்ட கலாச்சாரங்களையும் மதங்களையும் சேர்ந்தவர்கள் இணைந்து பணியாற்றும்போது, ஒருவர் மற்றவரின் மதத்தையும் கலாச்சாரத்தையும் நிகழ்வுகளையும் மதிக்கின்ற பண்பு ஆரோக்கியமான சமூக இணக்கத்தைக் கட்டியெழுப்ப பெரிதும் உதவுகிறது.

இன்றைய தினம் அமைச்சில் நடைபெற்ற இந்த விழாவில் எத்தகைய பாகுபாடுமின்றி அனைவரும் ஒன்றிணைந்து கலந்துகொண்டது பெருமிதம் அளிக்கிறது.>

அனைத்து விதமான வேற்றுமைகளையும் கடந்து ஒரு புதிய இலங்கையை நோக்கி நாம் நகர வேண்டும். சிங்கள, முஸ்லிம் மற்றும் தமிழ் என அனைத்து சமூகத்தினரும் மத வேற்றுமைகளை மறந்து ஒன்றிணைந்து, நம் நாட்டின் அனைத்து கலாச்சார மற்றும் ஆகமச் சிறப்புகளைப் போற்றி, ஒற்றுமையுடன் செயற்படுவதன் மூலமே நாம் எதிர்பார்த்த நல்லதொரு நாட்டை கட்டியெழுப்ப முடியும்.”> *சமத்துவமும் நீதியும் நடைமுறை வழக்கமாக மாறியுள்ளது:

பிரதம அதிதி அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உரை*நிகழ்வில் பிரதம உரையாற்றிய அமைச்சர் கௌரவ இராமலிங்கம் சந்திரசேகர் அவர்கள் குறிப்பிட்டதாவது:> “இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாதவாறு, நாட்டின் அனைத்து இடங்களிலும் மற்றும் அரச நிறுவனங்களிலும் இந்த ஆண்டு நவராத்திரி விழா மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

கடந்த காலங்களில் நிலவிய பிளவுகள் மற்றும் சந்தேகங்களுக்கு மாற்றாக, நம்மிடையே சமத்துவம், நீதி, நேர்மை மற்றும் சகோதரத்துவம் போன்ற உன்னத பண்புகள் வெறும் பேச்சுக்களுக்கு மட்டுமே வரையறுக்கப்படாமல், தற்போது நடைமுறை நிகழ்வுகளாக மாறி வருவதை இந்த நவராத்திரி விழா எடுத்துக்காட்டுகிறது.>

இதன் ஒரு பகுதியாக, இன்றைய தினம் காலையில் பாராளுமன்றத்தில் நடைபெற்ற நவராத்திரி விழாவில் கௌரவ பிரதமர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் கலந்து சிறப்பித்தனர்.

அங்கு பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஊழியர்களும் இவ்விழாவில் இணைந்துகொண்டனர். அழகிய சேலைகளை அணிந்தும், குங்குமப் பொட்டுகளை வைத்துக்கொண்டும், தமிழ் பெண்கள் என்றோ சிங்கள பெண்கள் என்றோ வேறுபாடின்றிக் காண முடியாத அளவுக்கு அனைவரும் ஒன்றிணைந்து, தாங்கள் அன்போடும் உழைப்போடும் நேசிக்கும் ஒரு நிகழ்வாக இந்த நவராத்திரி விழா மாறியுள்ளது.>

நமது கல்வி, செல்வம் மற்றும் வீரம் ஆகியவற்றுக்குக் காரணமான இறைவழபாட்டைப் போற்றிப் புகழும் இந்நிகழ்வு, மக்களுக்கு மன அமைதியையும் ஒரு புதுக்களமான முன்னெடுப்பையும் வழங்கியுள்ளது. இந்த நிகழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றுவதற்கு அயராது உழைத்த ஏற்பாட்டுக் குழுவினர், அமைச்சர், செயலாளர்கள், ஏனைய அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.”>

அமைச்சின் உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களின் பக்திமயமான கலைநிகழ்ச்சிகளுடனும் சிறப்பான வழிபாடுகளுடனும் விழா இனிதே நிறைவுற்றது.

manel