மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

மசகு எண்ணெய் விலை வீழ்ச்சி!

உலகளாவிய எரிசக்தி சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவின் விலையில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ளன.

உலகளாவிய எரிசக்தி சந்தை நிலவரப்படி, WTI ரக மசகு எண்ணெய் (West Texas Intermediate) பீப்பாய் ஒன்றின் விலை 75.68 அமெரிக்க டொலராக வீழ்ச்சியடைந்துள்ளது.

அதேவேளை, சர்வதேச ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படும் பிரெண்ட் (Brent) ரக மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 79.40 அமெரிக்க டொலராக நிலவுகிறது.

இதேவேளை, இயற்கை எரிவாயுவின் (Natural Gas) விலையிலும் இன்று மாற்றம் ஏற்பட்டுள்ளது.

அதன்படி, அதன் விலை 3.275 அமெரிக்க டொலராக அதிகரிப்பைப் பதிவு செய்துள்ளது.

manel