போகம்பரை மற்றும் காலியில் புதிய சிறைச்சாலைகள்

போகம்பரை மற்றும் காலியில் புதிய சிறைச்சாலைகள்
  • ஹர்ஷன நாணயக்காரவினால் அதிவிசேட வர்த்தமானிகள் வெளியீடு

பழைய போகம்பரை சிறைச்சாலை வளாகத்திற்குள் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார வெளியிட்டுள்ளார்.

சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் 2 ஆம் பிரிவின் கீழ் 54 ஆம் உறுப்புரையின், சிறைச்சாலைகள் கட்டளைச் சட்டத்தின் நோக்கங்களுக்காக அமைச்சருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களின்படி இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, காலி – மஹமோதர பகுதியில் புதிய சிறைச்சாலை ஒன்றை நிறுவுவது தொடர்பாக, நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவின் கையொப்பத்துடன் நேற்று முன்தினம் (07) மற்றுமொரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலும் வெளியிடப்பட்டிருந்தது.

manel