பெரும் குற்றவாளியைக் கைது செய்த காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது

பெரும் குற்றவாளியைக் கைது செய்த காரைதீவு பொலிஸ் உத்தியோகத்தருக்கு ஜனாதிபதி விருது

மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் பாரிய குற்றச்செயல் ஒன்றுடன் தொடர்புடைய, நீண்டகாலமாக தலைமறைவாக இருந்த முக்கிய குற்றவாளியைச் சாமர்த்தியமாகக் கைது செய்த காரைதீவைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ரி.றிசோவுக்கு ஜனாதிபதி விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றும் இவர், களுவாஞ்சிகுடியில் பணியாற்றியபோது தனது துரித மற்றும் நுணுக்கமான செயல்பாட்டின் மூலம் இக்குற்றவாளியைக் கைது செய்திருந்தார்.

இவரது இந்தத் துணிச்சலான சேவையைப் பாராட்டி, மட்டக்களப்பில் நடைபெற்ற ‘அகன்று செல்’ போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்வின்போது, ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அவர்களினால் இவருக்கு விசேட விருதும் வெகுமதியும் நேரடியாக வழங்கி வைக்கப்பட்டன.

ஒரு சாதாரண பொலிஸ் உத்தியோகத்தரின் கடமை உணர்வு நாட்டின் உயரிய மட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டமை, ஏனைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் மத்தியிலும் பெரும் ஊக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

manel