பிணையில் விடுவிக்கப்பட்ட போதிலும் ரோஹித மீண்டும் சிறைக்கு
ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்ட பின்னர் வழக்கு விசாரணைக்கு ஆஜராகாததைத் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ரோஹித போகொல்லாகமவை பிணையில் விடுவிக்குமாறு கொழும்பு மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு மேல்நீதிமன்ற நீதிபதி ரஷந்த கொடவெலவினால் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, பிரதிவாதியை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், மூன்று சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
எனினும், குறித்த பிணை நிபந்தனைகளை பூர்த்தி செய்ய முடியாமல் போனமையால், பிரதிவாதியான போகொல்லாகம மீண்டும் சிறைச்சாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.
லண்டனில் நடைபெற்ற வர்த்தகக் கண்காட்சியொன்றில் கலந்துகொண்டு, நிதி விதிமுறைகளுக்குப் புறம்பாக 15 இலட்சம் ரூபாவுக்கும் அதிகமான தொகையைச் செலுத்துமாறு முதலீட்டுச் சபையின் தலைவரைத் தூண்டியதன் மூலம் அரசுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தி ஊழல் புரிந்ததாகக் குற்றம்சாட்டி, முன்னாள் அமைச்சர் ரோஹித போகொல்லாகமவுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

