பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து தவறி வீழ்ந்த மாணவி!
பம்பலப்பிட்டியில் உள்ள ஒரு பெண்கள் பாடசாலையின் மூன்றாம் மாடியில் இருந்து மாணவி ஒருவர் தவறி வீழ்ந்த சம்பவம் நேற்று இடம்பெற்றுள்ளது.
உயர்தரப் பரீட்சையின் உயிரியல் வினாத்தாள் வழங்கப்படுவதற்கு முன்னர் இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது.
அந்த மாணவி இம்முறை இரண்டாவது தடவையாகப் பரீட்சைக்குத் தோற்றுபவர் என்று தெரியவந்துள்ளது.
அவர் விழ்ந்த இடம் காபற் போடப்பட்டிருந்ததாகவும் மாணவியின் பாதங்கள் இரண்டும் காயமுற்றிருப்பதாகவும் அவர் தற்போது கொழும்பில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

