பசறையில் மண்சரிவால் மக்கள் வெளியேற்றம்
சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் பசறைப் பகுதியில் 13ஆவது மைல்கல் அருகில் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, வீதியில் பாறைகள் விழுந்துள்ளதால் ஒரு வீதியை மாத்திரம் திறந்து வைக்க வீதி அபிவிருத்தி அதிகார சபை நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் பசறை, கனவெரெல்ல மேற்கு, ஹெலபொல பகுதியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக அப் பகுதியில் வசிக்கும் மூன்று குடும்பங்களை பாதுகாப்பாக வெளியேற்ற பசறை பிரதேச செயலாளர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

