நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல!

நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல!

ஒன்றோடொன்று இணைந்திருக்கும் இன்றைய நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கு விழிப்புணர்வு மாத்திரம் போதுமானதல்ல. நாம் எமது விழிப்புணர்வைக் கூட்டுச் செயல்பாடாகவும், எமது பொறுப்புகளை அளவிடக்கூடிய முடிவுகளாகவும் மாற்ற வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். 

பூட்டானில் நேற்று (01) நடைபெற்ற உலக விழிப்புணர்வு உணவு முறைமைகள் உச்சிமாநாட்டின், “தருணத்திற்கு ஏற்றவாறு எழுச்சி பெறுதல் – பலவித நெருக்கடிகளை எதிர்கொள்வதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்துதல்” (Rising to the Moment – Igniting Consciousness to Address the Polycrisis) எனும் தலைப்பிலான உயர்மட்டக் குழு விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

அதாவது, காலநிலை நடவடிக்கைகள், விவசாயத் துறையைப் புத்தாக்கப்படுத்துதல், பொறுப்புமிக்க நுகர்வு, உணவு விரயத்தைக் குறைத்தல், விவசாயிகளுக்கான ஆதரவு மற்றும் ஊட்டச்சத்திற்கான சமமான வாய்ப்புகள் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் மீள்திறன்மிக்க, அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்தன்மை வாய்ந்த அதேவேளையில் நியாயமான உணவு முறைமைகளைக் கட்டியெழுப்புவதாகும். 

அபிவிருத்தியும் நிலைத்தன்மையும் இணைந்து முன்னோக்கிச் செல்லும் ஓர் எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவதற்காக சர்வதேச ஒத்துழைப்பையும், காலநிலை நிதி மற்றும் தொழில்நுட்ப அணுகலையும் நாம் பலப்படுத்த வேண்டும் என தெரிவித்தார்.

manel